வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வக்ஃபு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. முஸ்லிம்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. ஆகவே இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.