கிடுகிடுவென உயர்ந்த முட்டை விலை

18480பார்த்தது
கிடுகிடுவென உயர்ந்த முட்டை விலை
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அத்தியாவசியப் பொருளான முட்டையின் விலை 1.10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த மே 1ஆம் தேதி 4.62 - 5 ரூபாய்க்கு விற்பனையான முட்டையின் விலை தற்போது 5 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களுக்கு முட்டை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், முட்டையின் விலை குறைவதை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி