போதை பொருள் கடத்தல்.. திமுகவிற்கு தொடர்பு

64பார்த்தது
போதை பொருள் கடத்தல்.. திமுகவிற்கு தொடர்பு
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கோரி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு துளி போதைப் பொருள் கூட இருக்கக் கூடாது என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். அண்மையில் கைதான ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளாக கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தோம். போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுக தார்மீக பொறுப்பேற்க வேண்டும். திமுக போதைப்பொருள் விற்பனை செய்து கிடைத்த பணத்தை தேர்தலில் செலவிட உள்ளது என பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி