குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர்- முதல்வர் இரங்கல்

58பார்த்தது
குழந்தைகளின் உயிர் காத்த ஓட்டுநர்- முதல்வர் இரங்கல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உயிர் போகும் தருவாயில் பல பள்ளி குழந்தைகளின் உயிர்களை காத்த ஓட்டுநர் மலையப்பன் இறப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், "இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி