பேட்மிண்டன் விளையாடிய திரௌபதி முர்மு.. வைரல் வீடியோ

53பார்த்தது
ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் நேற்று (ஜூலை 10) பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள கணக்கில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், உலக விளையாட்டுத் தளங்களில் நமது பெண் வீராங்கனைகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி