தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பரோட்டா கடை விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் சூரி பரோட்டா கடையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற படத்தை வைத்து, ‘நீங்க வேணுனா பந்தயத்துக்கு வர்றீங்களா’ என்றழைக்கும் வகையில் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 32 பரோட்டா சாப்பிட்டால் பணம் தர வேண்டாம், டோர் டெலிவரியும் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.