வியர்வை துர்நாற்றமா? அப்போ இதை பயன்படுத்துங்க

556பார்த்தது
வியர்வை துர்நாற்றமா? அப்போ இதை பயன்படுத்துங்க
கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தினை போக்கும் அருமருந்து வெட்டிவேர். அதிக மணம் உடையதும், மருத்துவ குணங்கள் நிறைந்ததுமான வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அந்த நீரில் குளிக்கும் போது அதிக வியர்வை மற்றும் தோல் அரிப்புகள் சரியாகும். உடல் மேலும் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெறும். வெட்டிவேரை அரைத்து பொடியாக்கி குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். அதே போல் வெட்டிவேரை அரைத்து முகத்தில் ஸ்க்ரப் போல பயன்படுத்தினால் எண்ணை வழியாது. முகம் கூடுதல் பொலிவு பெறும். வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி