மருத்துவமனையில் மது அருந்திய மருத்துவர்கள் (வீடியோ)

44724பார்த்தது
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய விவகாரம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெடிகான் 2023 மாநாடு இந்த மாதம் வியாழன் முதல் ஞாயிறு வரை தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.என்.மிஸ்ரா உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் ஒன்றாக மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி