சிகப்பு சீதாப்பழங்களை நம் ஊரின் செம்மண்ணில் எளிதாக சாகுபடி செய்யலாம். இது 3 ஆண்டுகளில் விளைச்சல் தரக்கூடிய ரகமாகும். இந்த சீதாப்பழங்களை நடும் பொழுது தண்ணீர் தேங்காத மேட்டு பகுதிகளில் நட வேண்டும். உவர் மண் நிலத்தில் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் தோல் மட்டும் சிகப்பாக இருக்கும். உள்ளே இருக்கும் சதைப்பற்று வெள்ளையாக இருக்கும். பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்கக்கூட தயங்குவதில்லை.