இன்றைய பிஸியான வாழ்க்கையில் நினைவாற்றல் இழப்பு, மூளைக் குறைபாடு, பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு, இருமுனைக் கோளாறு போன்ற பல தீவிர மூளை தொடர்பான பிரச்சனைகளுடன் மக்கள் போராடி வருகின்றனர். சரியான தூக்கம் இல்லாமை, நொறுக்குத் தீனி, உணவைத் தவிர்ப்பது, மன அழுத்தம், நீண்ட நேரம் உட்காருதல். இவை நினைவாற்றலை எதிர்மறையாக பாதிக்கிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடம் எழுந்து நடப்பது நன்மை பயக்கும் என கூறுகின்றனர்.