கோயிலில் மூலவரைக் கண்டவுடன் கண்களை மூடிக்கொள்ள கூடாது. மூலவரை வைத்த கண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள். இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுத்து ஆடை அணிகலனை ரசியுங்கள். அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள். இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப் படைத்த இறைவனுக்கு நமக்கு எது தேவை என்பதும் தெரியும். எனவே இறைவனிடம் கண் மூடி வேண்டுவதை தவிர்த்து கண்திறந்து பார்த்து தரிசிக்க வேண்டும்.