இயக்குநர் சங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “சு.வெங்கடேசனின் 'நவ யுக நாயகன் வேள்பாரி' நாவலின் பதிப்புரிமை என்னிடம் உள்ளது. அதிலுள்ள பல முக்கிய காட்சிகள் எந்த அனுமதியும் பெறப்படாமல் பல படங்களில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில், இந்நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. உரிமை மீறி காட்சிகளை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரும்” என குறிப்பிட்டுள்ளார்.