வேடசந்தூர்: இறந்தவரின் உடலை தண்ணீரில் சுமந்து சென்ற பரிதாபம்

55பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா
அய்யலூர் அருகே உள்ள பொட்டிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யாவு (வயது 70) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது பொட்டிநாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால் மயானத்திற்கு செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் வேறு வழியின்றி சுரங்கப்பாதையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீரில் இறங்கி உடலை தூக்கி பிடித்து சுமந்தபடி கடந்து சென்றனர். அதன்பின்னர் மயானத்தில் வைத்து இறுதிச் சடங்கு செய்தனர். இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பொட்டிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் மழை பெய்யும் நாட்களில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்ற ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி