வேடசந்தூர் அருகே உள்ள முருநெல்லிகோட்டை ஊராட்சி சுள்ளெறும்பு நால்ரோட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 20 வருடங்களாக இருந்து வந்தது. தொட்டியின் மேல் பகுதி நன்றாக இருந்தும் நான்கு தூண்களும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்து வந்தது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆபத்தான நிலையில் இருந்த தண்ணீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.