மதுரை உசிலம்பட்டி அருகே விக்ரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் அம்மன் பெட்டி மற்றும் கரகம் எடுத்து கோயில் வந்தனர். ஆயிரம் கண் பானை, மாவிளக்கு வழிபாடு நடந்தது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். (அக்., 16) அம்மன் கோயில் முன் பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டி வழிபாடு செய்தனர். நேற்று (அக்., 17) சக்தி கரகம் எடுத்தல், முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடந்தது.