அலகு குத்தி பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்

84பார்த்தது
திண்டுக்கல் மாநகர் பகுதியில் உள்ள நெட்டு தெரு, முனிசிபல் காலனி , செல்லாண்டியம்மன் கோவில் வடக்கு தெரு, ஆகிய பகுதிகளில் ஸ்ரீ சக்தி காளியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ வீர சக்தி காளியம்மன், என மூன்று கோயில்கள் உள்ளது. இம்மூன்று கோவில்களும் நூற்றாண்டுகளுக்கு பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மூன்று வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கும் கோவிலாக இருந்தாலும் ஒரே நாளில் திருவிழா கொண்டாடுவதே வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சாமி சாட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் மலைக்கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒன்று கூடுவர்.

இந்த கோட்டை குளத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தெய்வங்களும் பூத்தேரில் நகரில் முக்கிய ரத வீதி வழியாக வலம் வருவதற்காக தயார் நிலையில் வைக்கின்றனர்.

பிறகு கோட்டைகுளம் பகவதி அம்மன் கோவிலில் வைத்து பால்குடம் ஜோடித்து விட்டு 13 அடி நீளமுள்ள அலகுகளை பக்தர்கள் கன்னத்தில் குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் அழகு குத்தியும் நடனம் ஆடிக்கொண்டு செல்வது பார்ப்பதற்கே பக்தி பரவசமான காட்சியாக அமைந்திருந்தது.

மேலும் மூன்று பகுதியைச் சேர்ந்த மக்கள் திண்டுக்கல் நகர் பகுதியில் ஒன்றாக கூடி திருவிழா கொண்டாடுவது பார்ப்பவர்கள் மனதில் பக்தியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி