அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க அறிவிப்பு

73பார்த்தது
அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் ஸ்ரீபகவதி அம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த ஆண்டு வருகிற 19-ஆம் தேதி திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தக் கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சோ்ந்த 80 குடும்பத்தினரிடம் வரி பெறாததுடன், கோயில் திருவிழாவில் பங்கேற்கவும் கழுமரம் ஏறவும் அனுமதிக்காமல் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூா் வட்டாட்சியரிடம் அளித்த புகாா் மனு அளித்தனர். இதில் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களைத் தவிர, பிற சமுதாயத்தினா் கலந்து கொள்ளவில்லை. எனவே, இந்தக் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் பங்கேற்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில், கோயில் திருவிழாவில் அனைவரும் பங்கேற்பது தொடா்பாக புதன்கிழமை (மே 15) சமாதானக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினருக்கும் பொதுவானது கோயில். எனவே, அனைத்து சமுதாயத்தினரும் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் உரிமை உள்ளது. வழக்கு விசாரணை வருகிற 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தொடர்புடைய செய்தி