சிறந்த காவல் நிலையமாக நத்தம் காவல் நிலையம் தேர்வு

61பார்த்தது
தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாடு, சேவை உள்ளிட்ட
பல்வேறு அளவீடுகளின்
அடிப்படையில் மாநில அளவிலும்,
மாநகர, மாவட்ட அளவிலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழக
முதல்வரின் கேடயம் வழங்கப்படு
கிறது. அதன்படி மண்டல வாரியாக சிறந்த 10 காவல் நிலையங்களுக்கு
கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி தெற்கு மண்டலத்தில் மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த காவல் நிலையங்களுக்கு
கேடயங்களை டி. ஜி. பி. சங்கர் ஜிவால் வழங்கினார். அதில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில்
சிறப்பாக செயல்பட்டதிற்காக நத்தம் காவல்நிலையம்
தேர்வு செய்யப்பட்டது. இதையொட்டி சென்னையில்
நடந்த விழாவில் தமிழக டி. ஜி. பி. சங்கர்ஜிவால் நத்தம்
இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமியை பாராட்டி கேடயம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி