கன்னிமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

68பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பழநி ரோடு அயன்குளம் பகுதியில் அமைந்துள்ள புனித ஏழைகளின் கன்னிமாதா கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது

முன்னதாக புனித ஏழைகளின் கன்னி மாதா உருவம் பொறித்த கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது தொடர்ந்து திண்டுக்கல் மறை மாவட்ட அதிபரும் பங்கு தந்தையுமான மரிய இன்னாசி திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு சகாயராஜ் ஆகியோர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி வான வேடிக்கைகள் முழங்க அன்னையின் கொடி ஏற்றப்பட்டது இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மண்டலத் தலைவர் பிலால் உசேன் மாமன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா ஜெயராமன் மற்றும் மாரியம்மாள் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சனிக்கிழமை இரவு மின் தேர் பவனியும் ஞாயிற்றுக்கிழமை காலை பகல் சப்புற ஊர்வலம் நடைபெறும் திருவிழாவிற்கான ஏற்பாட்டினை நாட்டாமை சங்க நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் ஊர் இளைஞர்கள் அன்பியம் மகளிர் குழு உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி