தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு வட்டக்கிளி செயலாளர் ராஜாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும், 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் எனவும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்நிகழ்வில் வருவாய்த்துறை மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் டல்லஸ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட தலைவர் முபாரக் அலி கோரிக்கையை விளக்கி பேசினார். வட்டக்கிளை பொருளாளர் காளிராஜ் நன்றி உரை நிகழ்த்தினார். மேலும் அரசு ஊழியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி