திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கில் தனுஷ் இயக்கி நடித்துள்ள 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) வெளியானது. அதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் தனுஷின் கட்டவுட் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆரத்தி எடுத்தும், கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். பின்னர் திரைப்படத்தை காணச் சென்ற ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.