தேர்தல் முடிந்ததும் படை எடுத்த சுற்றுலாப் பயணிகள்

83பார்த்தது
தேர்தல் முடிந்ததும் கொடைக்கானலுக்கு படை எடுத்த சுற்றுலாப் பயணிகள்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதாலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் பணி காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் தாங்கள் ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தற்போது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டதால் ஓய்வுக்காக கொடைக்கானலை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விடுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து விடுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த விடுதிகளை எங்கிருந்த நிலையிலும் ஆன்லைன் மூலமே புக்கிங் செய்து கொள்ளலாம். அதன்படி தேர்தல் முடிந்த இருபதாம் தேதி முதல் பேக்கேஜ் விடுமுறைக்காக ஒரு வாரம் வரை பல புக்கிங் செய்ய தொடங்கியுள்ளனர். இவற்றைத் தவிர நடுத்தர விடுதிகள் மற்றும் ஏராளமான காட்டேஜ்களும் உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி