பட்டாசு பண்டல்களை ஏற்றி வந்த லாரி விபத்து

2262பார்த்தது
பட்டாசு பண்டல்களை ஏற்றி வந்த லாரி விபத்து
வேடசந்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து பட்டாசு பண்டல்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (32) என்பவர் ஓட்டி வந்தார்.

வேடசந்தூர் அருகேயுள்ள திண்டுக்கல்- கரூர் மாவட்ட எல்லையான கணவாய்மேட்டில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திண்டுக்கல்- கரூர் சாலையில் இருந்து சென்டர் மீடியனை தாண்டி அடுத்த சாலையோர பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் டிரைவர் காயமின்றி தப்பினார்.

மேலும் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த பட்டாசுகள் ஏதும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்ததும் லாரி உரிமையாளர், மாற்று லாரியை கொண்டு வந்து பட்டாசு பண்டல்களை ஏற்றி கொண்டு கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டார். இதுகுறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி