திண்டுக்கல் மாவட்டம்
பழனி அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சென்றுவரும் நிலையில் சாய்வு தளம் இல்லாததால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் இப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.