பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - வீடியோ

1076பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில தினங்களாக கோடையின் வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலானோர் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலமுத்திரம், கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, பேருந்து நிலையம் , ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி