பழனி முருகன் கோவில் ரோப்கார் நிறுத்தம்

73பார்த்தது
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிறுத்தம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமிதரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை , மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு 1 நாளும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இதன்படி இம்மாத மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை திங்கட்கிழமை ஒரு நாள் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியின் பொழுது ரோப்காரில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு பழுதடைந்த மற்றும் தேய்மானம் ஆன பாகங்கள் புதுப்பிக்கப்பட்டும் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரோப்கார் நிறுத்தத்தை அடுத்து பக்தர்கள் நாளை ஒருநாள் மட்டும் ரோப்காரை தவிர்த்து படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயில்களில் சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி