பழனி கடனை திருப்பி வாங்குவதில் ஏற்பட்ட தாகராறில் ஒருவர் கொலை

73பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துபிரவீன்குமார்(25), அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து(29). இருவரும் நண்பர்கள், நேற்று இரவு தாராபுரம் சாலையில் கருப்பணகவுண்டன்வலசு அருகில் இருவரும் மது அறுந்தி கொண்டிருந்தனர். குடிபோதையில் மாரிமுத்து கொடுத்த பணத்தை பிரவீனிடம் கேட்டு தகராறு செய்துள்ளான். பின்னர் இருவரும் சாலையில் நடந்து வரும்போது பிரவீனை மாரிமுத்து காரில் தள்ளிவிட்டுள்ளான். கார் மோதியதில் பிரவீன் படுகாயம் அடைந்துள்ளான். அதிர்ச்சியடைந்த மாரிமுத்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிரவினை கொண்டு வந்து சேர்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து பழனி தாலுகா காவல்துறையினர் தப்பி ஓடிய மாரிமுத்துவை தேடிவருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி