நெய்க்காரப்பட்டி ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதல்காளையாக பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை மற்றும் பல்வேறு கோவில் காளைகள் வெளியேறின.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 600க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சிமுறையில் வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். டி.எஸ்.பி தனஞ்செயன் தலைமையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.