உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து ஹனிஃப் அதேனி இயக்கத்தில் 2024 இறுதியில் வெளியான ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படமான 'மார்கோ' பெரிய ஹிட் அடித்தது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படத்தை டிவியில் ஒளிபரப்ப தற்போது தணிக்கை குழு தடை விதித்துள்ளது. மோசமான வன்முறை காட்சிகள் இருப்பதால், இது ஒளிபரப்ப ஏற்றதல்ல என்று கூறியுள்ள தணிக்கை குழு, ஓடிடியில் இருந்து இப்படத்தை நீக்கவும் பரிந்துரைத்துள்ளது.