வீடு முதல் ஹோட்டல் வரை பலரும் பழைய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால், அந்த உணவு விஷமாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கும். அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதில், அதிக கொழுப்பு சேர்ந்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும். எனவே, பழைய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.