துபாயில் இருந்து 142 கிலோ தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யாவை பெங்களுருவில் போலீசார் நேற்று (மார்ச் 4) கைது செய்தனர். தொடர்ந்து, அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்நிலையில், இன்று (மார்ச் 5) நடிகை ரன்யா ராவ் வீட்டில் இருந்து, கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது வீட்டின் படுக்கையறை உள்பட பல இடங்களில் ரூ.4.73 கோடி மதிப்புள்ள ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டு கட்டுகள், தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.