சொகுசு கார்களில் பிரபலமானது வோல்வோ நிறுவனம், ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் என நிர்ணயம் செய்துள்ளது. இந்த கார் தற்போது 20-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்கள், 360-டிகிரி கேமரா உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. மேலும் AWD அமைப்புடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.