மின்விளக்குகள் எரியாததால் வழிப்பறி அதிகரிப்பு

71பார்த்தது
திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்கு வரும் சாலையில் சின்னாளபட்டி பிரிவு அருகே தேசிய நான்கு வழிச்சாலை சார்பாக சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மின்விளக்குகள் எரியாததால் சின்னாளபட்டி புறவழிச்சாலை பகுதி இரவு நேரங்களில் கடும் இருட்டாக உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து வரும் மற்றும் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்களிடம் இருந்து வழிப்பறிகள் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும். பலமுறை தேசிய நான்குவழிச்சாலை நிர்வாகத்திடம் புகார் செய்தும் பழுதடைந்த சோலார் மின்விளக்குகளை சரிசெய்ய நிர்வாகம் வில்லை எனவும். சின்னாளபட்டி புறவழிச்சாலை கிழக்கு பகுதி செட்டியபட்டி ஊராட்சிக்கும், மேற்கு பகுதி கலிக்கம்பட்டி ஊராட்சிக்கும் சேர்ந்தது. தேசிய நான்கு வழிச்சாலை நிர்வாகத்தை எதிர்பார்க்காமல் சம்மந்தப்பட்ட பகுதிகளில் சின்னாளபட்டி பேரூராட்சி கலிக்கம்பட்டி ஊராட்சி, செட்டியபட்டி ஊராட்சி இணைந்து சாலை ஓரங்களில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி