உடல் நல குறைவால் கடலூர் சிறை கைதி உயிரிழப்பு

79பார்த்தது
உடல் நல குறைவால் கடலூர் சிறை கைதி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம்
பழனிஅரசமரத்து தெருவை சேர்ந்த முத்துசாமி கொலை வழக்கில் இவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2013ஆம் ஆண்டு கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். முத்துசாமிக்கு வெள்ளிக்கிழமை இரவு மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக தெரிகிறது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

டேக்ஸ் :