திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் அமைந்துள்ள
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத கார்த்திகை பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.