பார் ஊழியரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு

5125பார்த்தது
பார் ஊழியரை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த, வீரக்கல் அருகே காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. இந்த மது கடை அருகே பார் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (37) என்பவர் பாரில் பணியாற்றி கொண்டிருந்தார். அவருடன் வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த, பழனியப்பன் (42) என்பவர் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

அப்போது, கூத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் வெளியூரை சேர்ந்த இரண்டு பேர் என, நான்கு பேர் மது அருந்த வந்துள்ளனர். அவர்கள், பாரில் மது அருந்திவிட்டு செல்லும்போது, அவர்களிடம் பார் ஊழியர் செல்வராஜ் என்பவர், அவர்கள் சாப்பிட்ட சிக்கன், மீன், முட்டை மற்றும் குடிதண்ணீர் பாட்டில்களுக்கு (வாட்டர் பாட்டில்) பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல், நீளமான கத்தியில் செல்வராஜ் என்பவரை பயங்கரமாக தலை மற்றும் கைகளில் வெட்டி உள்ளனர்.

பின்னர் பாரில் இருந்த, உணவுப் பொருள்கள் மற்றும் சேர், டேபில் உள்ளிட்டவைகளை மது போதையில் வீசி எறிந்து, உடைத்து சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த, செல்வராஜ் என்பவரை, அந்த பகுதியில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி