திண்டுக்கல், பழனிரோடு ராமயன்பட்டி பகுதியை சேர்ந்த ஜீசஸ்ஆண்டனி வயது 21 என்பவரை அதே பகுதியை சேர்ந்த செந்தூரியன் வயது 24 என்பவர் கத்தியால் வெட்டியதில் ஜீசஸ்ஆண்டனி காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
மேற்படி சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு செந்தூரியனை பிடிக்கச் சென்ற போது போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து ஓடிய செந்தூரியன் கீழே விழுந்து கை எலும்பு முறிந்தது
மனிதாபிமான அடிப்படையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் செந்தூரியனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.