திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து அசைவம் சாப்பிட்ட விவகாரத்தில் நவாஸ்கனி எம்.பி. யைக் கண்டித்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு அந்தக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலர் சூர்யா தலைமை வகித்தார்.
வர்த்தக அணி மாவட்டத் தலைவர் வெங்கடேஷ், விவசாய அணி மாவட்டத் தலைவர் நாட்டுத்துரை, ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலர் ஜெகதீஷ், ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றியச் செயலர் கருப்பையா, நகர இளைஞர் அணித் தலைவர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவினர் 60 பேரை கைது செய்தனர்.