இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல்

79பார்த்தது
திண்டுக்கல் எம். வி. எம் கல்லூரி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திண்டுக்கல் நகர் குழு சார்பில் MVM கல்லூரி அருகே கோடைகால நீர் மோர் பந்தல் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவை வாலிபர் சங்க நகர செயலாளர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வை புதன்கிழமை காலை 11: 30 மணியளவில் CPIM திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட தலைவர் கே. ஆர். பாலாஜி , மாவட்ட செயலாளர் முகேஷ், நகர தலைவர் சூர்யா, செயலாளர் பிரேம்குமார், நிர்வாகிகள் தர்மலிங்கம் சாமுவேல், 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் கணேசன், முன்னாள் மாவட்ட தலைவர் அரபுமுகமது,
விஷ்ணுவர்தன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி