பக்தர்களின் நலன் கருதி உணவு ஏற்பாடு பழனி திருக்கோயில் தகவல்

71பார்த்தது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பாக
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு 13. 07. 2024 சனிக்கிழமை நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தினை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி எவ்வித கட்டணமும் விலையும் இல்லாமல்.
காலை 6. 00 மணி முதல் இரவு 10 மணி வரை மலைக்கோயிலில் சுமார் 8000 நபர்களுக்கு அன்னதானம் தடையில்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர மலைக்கோயிலில் 2000 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படும்.
கிரிவீதியில் பக்தர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பாதவிநாயகர் திருக்கோயில், பாலாஜி ரவுண்டானா, சுற்றுலா பேருந்துநிலையம், ரோப்கார் நிலையம், மற்றும் வின்ச் நிலையம் ஆகிய 5 இடங்களில் சுமார் 20, 000 நபர்களுக்கு பிஸ்கட், பழங்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தண்டபாணி நிலைய தங்கும் விடுதி வளாகத்தில் தங்கிச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சுமார் 1000 நபர்களுக்கு
பிஸ்கட், பழங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு வரும் சிறு குழந்தைகளுக்கு மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுமார் 1000 குழந்தைகளுக்கு
பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி