தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ஒத்திகை நிகழ்ச்சி

70பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், "தீயணைப்பு துறைக்கு 2024ல் வழங்கப்பட்டுள்ள பல்வேறு மீட்பு கருவிகளைக் கொண்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வாகனம் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக புதிதாக வழங்கப்பட்டுள்ள கருவிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அடிப்படையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

புகை மூட்டமாக இருக்கக்கூடிய அறையில் இருந்து புகையை வெளியேற்று கருவிகள், கட்டிட இடிபாடுகள் இடையே சிக்கிய நபர்களை காப்பாற்ற கான்கிரீட் கட்டிங் கருவிகள், இரும்புகளை அறுக்கும் கருவிகள், இரண்டு வாகனங்கள் மோதிக் கொள்ளும் பட்சத்தில் அதன் உள்ளே இருக்கும் நபர்களை மீட்கும் கருவிகள், இரண்டு வாகனங்கள் மோதி பிரிக்கக்கூடிய ஏர் பலூன் கருவிகள் உட்பட பல்வேறு கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், தீ விபத்து ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி