ரோட்டில் பஸ்களை நிறுத்தி மோதிய டிரைவர்கள்

71பார்த்தது
ரோட்டில் பஸ்களை நிறுத்தி மோதிய டிரைவர்கள்
ஒட்டன்சத்திரத்தில் டைமிங் பிரச்னை காரணமாக அரசு பஸ் டிரைவரும் தனியார் பஸ் டிரைவரும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். மதுரையில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. இது போல் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பொருளூருக்கு தனியார் பஸ்சும் சென்றது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை அருகே இரு பஸ்களும் சென்ற போது டைமிங் பிரச்னை காரணமாக தனியார் பஸ் டிரைவரும் , அரசு பஸ் டிரைவரும் பஸ் நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஒருவரை ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதோடு அங்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்க நெரிசலும் ஏற்பட்டது. இவ்வளவு நடந்தும் போலீஸ் , துறை ரீதியாக எந்த எந்த நடவடிக்கையும் இல்லை. சாதாரண மக்கள் ரோட்டில் தகராறு செய்தால் நடவடிக்கை எடுக்கும் போலீசார் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வியப்பாக உள்ளது. இச்சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுக்க அது தற்போது வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி