5 தலைமுறைகள் கண்ட ஒரே மாபெரும் இயக்கம்: பழனி எம்எல்ஏ

50பார்த்தது
திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வண்ணம் கழக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், ஆத்தூர் மேற்கு ஒன்றியம், சின்னாளபட்டி சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம் பேரூர் கழக திமுக சார்பாக கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் சின்னாளபட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

அவர் பேசும்போது, கொட்டும் மழையில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக என்ற இயக்கம் ஆலமரம் போல் தளைத்து இன்று விண்ணுயர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரில் தொடங்கி திராவிட மாடல் எழுச்சி நாயகர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் வருங்கால தமிழகம் உதயநிதி ஸ்டாலின் அவர்களே காரணம்.

அடிமட்ட தொண்டனுக்கும் பாதுகாப்பாக இருப்பது திமுக என்ற பேரியக்கம் தான். அதனால்தான் இந்த இயக்கம் ஐந்து தலைமுறைகளை கண்டுள்ளது. 2024ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் எப்படி 40க்கு40 தொகுதிகளில் வெற்றி பெற்றோமோ அதுபோல வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றார். திமுக தொண்டனின் உறுதி மொழி என கருதி வரும் சட்டமன்ற தொகுதிக்கான பணியை இன்றே தொடங்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி