திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தேர்வு

63பார்த்தது
திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தேர்வு
திண்டுக்கல் மாவட்டச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்த இரா. சச்சிதானந்தம் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பவா்கள், கட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில், மாவட்டச் செயலா் பொறுப்பிலிருந்து அவா் விலகினாா்.

இதையடுத்து, புதிய மாவட்டச் செயலரைத் தோ்வு செய்வதற்கான மாவட்ட நிா்வாகிகள் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

முன்னாள் மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான இரா. சச்சிதானந்தம், மத்தியக் குழு உறுப்பினா் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கே. பாலபாரதி, என். பாண்டி, மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெ. செல்வராஜ் புதிய மாவட்டச் செயலராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இவா் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவராக பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :