ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தினருடன் கொடைக்கானல் வந்த முதலமைச்சர்

3628பார்த்தது
தமிழக முதல்வர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் பாம்பார்புரம் வந்தடைந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஐந்து நாள் பயணமாக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்து, மதுரையிலிருந்து கார் மூலம் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு திங்கட்கிழமை மதியம் 3 மணி அளவில் வந்தடைந்தார். முதல்வர் வருகையை ஒட்டி கொடைக்கானல் நகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி