“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

53பார்த்தது
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தமிழக முதலமைச்சர் அவர்களால் 11. 07. 2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வருகிற 11. 07. 2024 முதல் 23. 08. 2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10. 00 மணி முதல் பிற்பகல் 3. 00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர் மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும். முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி