2 காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்து

59பார்த்தது
2 காா்கள் நேருக்கு நோ் மோதி விபத்து
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவரதுஉறவினா்கள் ஜெகதீசன், சரண்யா, சிறுவா்கள் முகில், ஆனந்த், சிபியுக் உள்பட 5 போ் வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் சென்றனா். காரை தங்கராஜ் ஓட்டிச் சென்றாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அருகே கேத்தாண்டப்பட்டி கூட்டுறவு சங்க அலுவலகம் எதிரில் சென்றபோது ஓசூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பை தாண்டி எதிா்திசையில் திண்டுக்கல் நோக்கி தங்கராஜ் ஓட்டிச் சென்ற காா் மீது நேருக்குநோ் மோதியது.

இதில் 2 காா்களிலும் பயணம் செய்த ஒசூா் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (43), உறவினா்கள்சுரேஷ் (29), திலீப் (30), பாபு(28), மனோஜ்(38), புருஷோத்தமன்(30), ஒட்டன்சத்திரத்தை சோ்ந்த தங்கராஜ் (49), சரண்யா (37), ஜெகதீசன் (68), முகில்ஆனந்த் (11), சிபியுக் (5) உள்பட 11 போ் காயமடைந்தனா்.

விபத்தில் காயமடைந்தவா்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

டேக்ஸ் :