தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கருத்தரங்கு கூட்டம்

71பார்த்தது
தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கருத்தரங்கு கூட்டம்
காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசியத் தேர்வு முகமை தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மாணவர்களுக்கான பயிற்சி மையத்தின் சார்பில் தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்குரிய தேசியத் தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியர்கள் தமிழரசன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத் தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்தியாவில் பட்டப் படிப்பில் சேர்வோர் எண்ணிக்கை விகிதம் 30-விழுக்காடு அளவிற்கு குறைவாக இருக்கிறது. இது உயர வேண்டும். மாணவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தர அளவீடுகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து சிறப்பு குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி