உயிர்த்த ஆண்டவர் சப்பர பவனி

571பார்த்தது
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு விழாவையொட்டி உயிர்த்த ஆண்டவர் சப்பர பவனி நடைபெற்றது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 333 ஆண்டுகளாக 96 கிராமங்களில் தாய் கிராமமாக புனித யாாகுல அன்னை பேராலயம் விளங்கி வருகிறது. இதனால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் மீட்பர் இயேசு கிறிஸ்து கொணர்ந்த மீட்பின் வரலாற்றை பாஸ்கு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ‌ அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு பாஸ்கு மேடையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பாடுகளின் பாஸ்கா நாடகம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மரித்த இயேசு கிறிஸ்துவின் திருச்சடலை தூம்பா ஊர்வலம் மற்றும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சி அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு பங்கு திருத்தளத்தில் திருப்பலி நடைபெற்றது. இதனை புனித வளனார் பேராலய பங்குத்தந்தை மரிய இன்னாசி நிறைவேற்றினார். இரவு உயிர்ப்பு பாஸ்கா நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் உயிர்த்த ஆண்டவரின் ரத பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சப்பிர பவானியின் போது வலி முழுவதும் மிளகு, உப்பு ஆகியவை காணிக்கையாக செலுத்தி ஏராளமானோர் வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி