திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மச்சூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கரத்தில் மது போதையில் வந்த சூர்யா மற்றும் விஷ்ணு அதிவேகமாக சென்றுள்ளனர். அப்பொழுது சிவராம மூர்த்தி சாலையை கடக்கும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிவராம மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் சத்தியா பாதிக்கப்பட்டவர்களை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசியதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தங்கராஜ் என்பவரை பாதி சிகிச்சையில் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். மேலும் மச்சூர் பகுதி பொதுமக்கள் இன்று காலையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூட்டத்திற்கு செல்லும் பொழுது வாகனத்தை மறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட தாண்டிக்குடி காவல் ஆய்வாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது பாதிக்கப்பட்ட தங்கராஜ் என்பவரை மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.